News March 27, 2024
திண்டுக்கல்லில் 26 பேர் வேட்புமனு தாக்கல்

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு அளிக்க இன்றோடு முடிவடைந்தது. இந்நிலையில், திண்டுக்கல் தொகுதிக்கு 35 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை அனைத்து கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடியிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
காதலியை ஏமாற்றிய இளைஞர் கைது!

பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானர். இந்தநிலையில் விவேக் அப்பெண்ணை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விவேக்கை திருப்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
News April 20, 2025
விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News April 20, 2025
திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <