News May 7, 2025

தி.மலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை மாவட்டம் பொறுத்தவரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க ஏரியால வானிலை எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News May 8, 2025

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

image

தி.மலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு நேரடியாகவும்,  2-ம் ஆண்டு மற்றும் பகுதி நேர பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு http//www.tnply.in இணையதளம் வாயிலாக வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News May 8, 2025

தி.மலை: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

தமிழக அளவில் திருவண்ணாமலை 31வது இடம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 26,756 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 11,576 பேரும், மாணவிகள் 13,479 பேரும், மொத்தமாக 25,555 மாணவ மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.47 சதவீதமாக இருந்த நிலையில் இந்த 93.64 சதவீதம் உயர்ந்து தமிழக அளவில் 31வது இடம் பிடித்துள்ளது.

error: Content is protected !!