News April 20, 2025
தாளவாடி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வயர்மேன் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தாளவாடி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2025
ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <
News April 20, 2025
திருமண தடை நீக்கும் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர்

ஈரோடு, கோனார்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை, நில பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு,தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <