News March 26, 2025
தாய்ப்பால் குடித்த பெண் குழந்தை மூச்சுத்திணறி பலி

திருத்தணி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் சுவாதி – பிரித்திவிராஜ் தம்பதியினர். இவர்களுக்கு 2 மாதமான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு நேற்று (மார்.25) தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Similar News
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியிடங்கள், 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் இந்த <
News April 7, 2025
மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில், 2ஆவது மனைவி மற்றும் தனது 27 வயது மகளுடன் வசிப்பவர் 70 வயதுடைய நபர். மகள், வாய் பேசாத முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். மகளுக்கு, அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், உறவினர் பெண்ணிற்கு தந்தையின் அத்துமீறல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை நேற்று (ஏப்ரல் 6) கைது செய்தனர்.
News April 7, 2025
கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவன் பலி

பூந்தமல்லி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித்குமார் (15). இவர், கடந்த 3ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக பைக்கில் சென்றபோது, குன்றத்தூர் அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரி பேருந்து மோதியது. இதில், ரோகித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த 9 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 6) சிகிச்சை பலனின்றி ரோகித்குமார் உயிரிழந்தார்.