News November 18, 2024
தவறை தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
நவல்பட்டு அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் வளர்மதி (50). இவரது மகன் மணிகண்டன் (29). நேற்று மது போதையில் இருந்த மணிகண்டன் தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வளர்மதியின் அண்ணன் மகனான மணிகண்டன் (28) இதை தட்டிகேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வளர்மதியின் மகன், தட்டி கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News November 19, 2024
வருத்தம் தெரிவித்த முன்னாள் அமைச்சர்
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கள ஆய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தங்கமணி அதிமுக நிர்வாகிகள் பொறுமையாக இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது எனவும், இதனால் தான் நாம் வெற்றியை இழந்து விட்டோம் என தெரிவித்தார்.
News November 19, 2024
திருச்சியில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர் கூட்டம் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 19, 2024
சிறுகனூர் அருகே விவசாயி பலி
பாலையூரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (36). இவர் தத்தமங்கலத்திலிருந்து பாலையூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையின் குறுக்கே மயில் வந்ததால், அதன் மீது வாகனம் மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். அப்போது ராஜீவ் காந்தி நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.