News December 29, 2024
தலைமறைவானவருக்கு கோர்ட் பிடிவாரண்டு
புதுச்சேரி கனக செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நாகப்பன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் அதனை தொடர்ந்து புதுவை முதன்மை உதவி கோர்ட் அமர்வு கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.
Similar News
News January 3, 2025
புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையானது அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
News January 3, 2025
சிலிண்டர் மானியத்தில் 1,90,021 குடும்பங்கள்- முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதலமைச்சரின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.300/- மற்றும் மஞ்சள் நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு ரூ.150/- என ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கான மானியம். 1,90,021 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றார்.
News January 3, 2025
மது போதையில் இருதரப்பினர் மோதல் – 10 பேர் மீது வழக்கு
புதுச்சேரி பெரிய கடை போலீசார் ரோந்து சென்றனர் அப்போது ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் உணவகம் எதிரே இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் மூன்று பேரை பிடித்து சென்றனர் அவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிரான கோஷங்களை சில பெண்கள் எழுப்பினர் இதில் அமுதா ஹரிணி ஜான்சி சத்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்