News October 8, 2024
தற்காலிக பட்டாசு கடைக்கான விண்ணப்பம் தொடக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன் படி விதி என் 84இன் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்: https://www.tnesevai.tn.gov.in எனும் இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பத்தை 19.10.2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Similar News
News November 20, 2024
தருமபுரி மருத்துவமனைகளுக்கு கலெக்டர் உத்தரவு
Low Risk இருந்து High Risk க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவரை ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். மேலும், அவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ENTRY போட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 19, 2024
தருமபுரி கலெக்டர் அறிவிப்பு
தருமபுரியில் ஆவின் பாலக முகவர்களாக நியமனம் பெற விருப்பம் உள்ள முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆவின் பாலாக முகவர் நியாயமானது ஆவின் நிறுவன www.aavinmilk.com என்ற நிறுவன இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைபிரிவு நந்தனம் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,836 பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 907 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் என முகாமில் இதுவரை 12,836 பேர் விண்ணப்பித்துள்ளதாக என அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.