News April 5, 2025

தர்மபுரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று கனமழையும் மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 6, 2025

தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

தர்மபுரி ஆட்சியரகம் 04342231500, எஸ்.பி 9498101055, வருவாய் அலுவலர் 9445000908, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, BSNL உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.

News April 6, 2025

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த தருமபுரி நிர்வாகி

image

திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளரும் சேலம் தருமபுரி 4 வது மண்டல பொறுப்பாளருமான சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை இன்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!