News April 6, 2025
தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

தர்மபுரி ஆட்சியரகம் 04342231500, எஸ்.பி 9498101055, வருவாய் அலுவலர் 9445000908, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, BSNL உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News April 16, 2025
ரூ. 10 இலட்சத்தில் குழந்தை நேய சூழல் உருவாக்கப்படும்

தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதலாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் ஒளி/ஒலி காட்சி வசதிகள், குழந்தைகளுக்குரிய உட்புற வசதிகள் மற்றும் கண்கவர் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை நேய சுழல் தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ. 10 இலட்சத்தில் உருவாக்கப்படும் என இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
News April 16, 2025
பாலக்கோடு: ஏரியில் மூழ்கி தொழிலாளி சடலமாக மீட்பு

தொம்பகாரம்பட்டியை சேர்ந்த தொழிலாளி விக்னேஷ் என்பவர் நேற்று முன்தினம், தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி ஏரிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, விக்னேஷ் நீரில் மூழ்கினார். அங்கு வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அன்று மாலை முதல், தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று ஏப்ரல் 15 விக்னேஷ் சடலத்தை மீட்டனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க