News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 30, 2025
தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

ஆர்கே பேட்டை அடுத்த கோசராபள்ளி கூட்டு சாலையில் இன்று காலை தனியார் பேருந்து பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த கோசராபள்ளி காலனியைச் சேர்ந்த விஜயன் என்பவர் மீது தனியார் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 30, 2025
கொதிக்கும் திருவள்ளூர்

தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.இந்நிலையில் திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 100.4 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்
News March 29, 2025
சனி பகவான் மகனின் தோஷம் நீக்கிய அற்புத தலம்

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க