News March 21, 2024

தருமபுரி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி.

Similar News

News April 14, 2025

தூய்மை பணியாளர்களை இரவு நேரங்களில் பணி செய்ய நிர்பந்தம்

image

தருமபுரி நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளர்களை இரவு நேரங்களில் பணியாற்ற நிர்பந்திப்பதை தடுக்கக் கோரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் “ பெண் தூய்மைப் பணியாளர்கள் இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என்றார்

News April 14, 2025

திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

தவறான சிசிச்சையால் ஒருவர் உயிரிழப்பு

image

நல்லம்பள்ளியில் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் படித்த கிருஷ்ணசாமி காலில் காயத்துடன் வந்த கோவிந்தராஜிக்கு அலோபதி சிகிச்சை அளித்ததில் உயிரிழந்தார். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!