News November 24, 2024
தருமபுரி திமுக மேற்கு மா. செ அழைப்பு

காரிமங்கலம் தலைமை அலுவலகத்தில் நவ.25 ஆம் நாள் காலை 11.00 மணிக்கு திமுக சார்பு அணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
தருமபுரி: 10th பாஸ் போதும் ரயில்வே வேலை ரெடி

கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News August 5, 2025
தருமபுரி: நாளை எங்கெல்லாம் மின் தடை?

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி மற்றும் அரூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பாரதிபுரம், உங்கரானஅள்ளி, நேருநகர், வெங்கட்டம்பட்டி, ஒட்டப்பட்டி, செந்தில்நகர், மாதேமங்கலம் தொழில்மையம், கலெக்டரேட், அரூர், பெத்தூர், அச்சல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9- மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 5, 2025
தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 8, 2025 அன்று காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.