News September 20, 2024
தயாராக இருக்க வேண்டும்: நீலகிரி கலெக்டர்
நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் முதல் நிலை பொறுப்பாளர்களின் மொபைல் எண்கள், அவசரகால உபகரணங்கள் அனைத்தும் தயாராக வைத்திருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
நீலகிரியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை, தொழிலாளர் நலத்துறை வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. பதிவேற்றம் செய்த விபரங்களை குன்னூர் தொழிலாளர் உதவியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
புவிசார் குறியீடுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லேட்
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு உருவாக்கப்பட்டு 2002 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 61 வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 45 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் ஊட்டி சாக்லேட்டும் அடங்கும். ஏற்கனவே ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
உதகையில் பிக் பாஸ் புகழ் அமீர்
தனியார் கார் நிறுவன விழாவில் கலந்து கொள்ள உதகை வந்த பிக் பாஸ் புகழ் அமீர் செய்தியாளரிடம் பேசுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல்ஹாசன் ஒருவிதமாகவும், விஜய் சேதுபதி ஒருவிதமாகவும் மக்களை கவர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனை ஒரு முறையாவது பார்த்து விட முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகன், அவரது நிகழ்ச்சியில் பங்கு பெற்று உங்கள் முன்னால் எல்லாம் நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.