News April 8, 2025
தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட மூவர் பணியிட மாற்றம்

திருவையாறு, நடுக்காவேரியில் விஷம் குடித்து இறந்த சகோதரிகள் வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்த நிலையில், நேற்று ஏப்ரல் 16 புதன்கிழமை நடுக்காவேரி காவல் நிலையத்தில் தலைமை காவலர் மணிமேகலை, உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
தஞ்சை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்.16) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
News April 16, 2025
தஞ்சையில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <