News April 14, 2025
தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் வணிகர்கள் தங்களது நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகையினை வைத்து பராமரித்திடல் வேண்டும். வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
10 வயது சிறுமிக்கு தொந்தரவு – கொத்தனார் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News April 17, 2025
பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் அந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, அம்பேத்கர் சிலை அருகில் என்ற முகவரியிலோ,7010498011,9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 17, 2025
முதலமைச்சர் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு தகுதியுடைய நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 03.05.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஏப்.17) தெரிவித்துள்ளார்.