News March 20, 2025

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது: EPS 

image

சென்னை தலைமைச் செயலகத்தில், எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்.20) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. ஆட்சியா இது? உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க மறுக்கிறர் முதலமைச்சர். எல்லா உயிரும் காக்கப்பட வேண்டும். அது தான் அரசாங்கம். சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறையை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறது இந்த அரசு. இதை வேதனையாக உள்ளது” என்றார்.

Similar News

News March 30, 2025

டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 30, 2025

SC, ST இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் இளநிலை படிப்பு முடித்த 21 முதல் 25 வயது வரை உள்ள எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு பொறியாளர் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News March 30, 2025

தூத்துக்குடி – சென்னை இடையே விமான சேவை அதிகரிப்பு

image

தூத்துக்குடி – சென்னை இடையே இருமார்க்கங்களிலும் தலா 4 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே, அனைத்து நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி – சென்னை இடையே இன்று (மார்ச் 30) முதல் கூடுதலாக இருமார்க்கங்களிலும் 3 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு இருமார்க்கங்களிலும் தலா 7 விமான சேவைகள் இயக்கப்படும் என தூத்துக்குடி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!