News April 22, 2025

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 314 கிலோ பீடி இலைகள்

image

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு இடையிலான ஆமை முட்டைகள் பொரிப்பகம் அருகே கடற்கரையோரம் சாக்கு மூட்டைகள் இருப்பதைக் கண்ட கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார், அதனை சோதித்த போது, அதில் 314 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. பின்னர், அவை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 22, 2025

இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

News April 22, 2025

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25-04-2025 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 20 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் 10th, 12th, ITI, Degree ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல் 21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!