News March 7, 2025

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

image

போடி குப்பிநாயக்கன்பட்டி மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மோகன்காந்தி (40). இவா் தேனியில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக இவா் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மது அருந்தினாராம். இதை இவரது மனைவி சரண்யா கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த இவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.போடி நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனா்.

Similar News

News April 21, 2025

வீரபாண்டி மாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மன், 5ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பான கரங்கள் நடைபெற்றன. இதில் வீரபாண்டி பொது மக்களுக்கு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் செய்திருந்தார்.

News April 21, 2025

வடுகபட்டியில் படித்த முன்னாள் மாணவர்களுடன் சாப்பிட்ட கவிஞர்

image

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது 70,ஆண்டுகள் முன் சேர்ந்து படித்த மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துள்ளனர்

News April 20, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!