News April 22, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் 25ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12, 10ஆம் வகுப்பு படித்த 18 – 35 வயதுடையவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், புகைப்படத்துடன் காலை 9.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News August 10, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
காஞ்சிபுரம்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

காஞ்சிபுரம் இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு <
News August 9, 2025
காஞ்சிபுரம் வருகை தரும் துணை முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆக.13-ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தரவுள்ளார். அப்போது, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.