News April 4, 2025
தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <
Similar News
News April 7, 2025
அங்கன்வாடி வேலைவாய்ப்பு, ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர்கள், 29 குறுஅங்கன்வாடி பணியாளர், 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் www.icdstn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை SHARE பண்ணுங்க
News April 7, 2025
தஞ்சை: மானியத்தில் பண்ணை அமைக்க ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும், தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் nlm.udyamimitra.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.