News April 23, 2025

தஞ்சை மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் பின்வருமாறு..தஞ்சாவூர் – 04362-230456, திருவையாறு – 04362-260248, பூதலூர் – 04362-288107, திருவிடைமருதூர் – 0435-2460187, கும்பகோணம் – 0435-2430227, பாபநாசம் – 04374-222456, பட்டுக்கோட்டை – 04373-235049, பேராவூரணி – 04362-288107, ஒரத்தநாடு – 04372-233225. இதை தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்

Similar News

News April 24, 2025

தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

image

ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி – கற்பகசுந்தரி தம்பதியினர். கணவருடனான தகராறின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கற்பகசுந்தரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ராமமூர்த்தி தான் அடித்து கொன்றுள்ளார் என உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்த காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக ராமமூர்த்தியை கைது செய்தனர்.

News April 24, 2025

பெரிய கோவிலில் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு

image

ஜம்முகாஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோபுர வாசலில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

News April 23, 2025

தஞ்சாவூர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!

error: Content is protected !!