News April 9, 2024
தஞ்சை: பறக்க விடப்பட்ட விழிப்புணர்வு பலூன்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 % நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ராட்சத விழிப்புணர்வு பலூன் இன்று பறக்க விடப்பட்டது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பறக்க விட்டார். இந்நிகழ்ச்சிகள் பயிற்சி கலெக்டர் விஷ்ணு பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 29, 2025
தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் இயங்காது

மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் செயல்படாது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி கடைகள் மூடி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
News April 29, 2025
தஞ்சாவூர்: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

தஞ்சாவூரில் கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறையின் அதிகாரிகளின் எண்கள்.
தஞ்சை எஸ்.பி.04362-277110/190 – வல்லம் டி.எஸ்.பி 9442720990 – கும்பகோணம் டி.எஸ்.பி 8870005315 – பட்டுக்கோட்டை டி.எஸ்.பி 9443617656 – ஒரத்தநாடு டி.எஸ்.பி 8248719390 – மாவட்ட குற்றப் பிரிவு 9498187373 – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 9443569803 ஆகிய எண்கள் தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் Share செய்து பயனடையவும்..
News April 29, 2025
தஞ்சை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினமான (மே.1) தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.