News April 5, 2025
தஞ்சை: உணவக உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தஞ்சவூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவக உரிமையாளர்கள் சங்க ஆய்வு கூட்டம் நேற்று (ஏப் 04) நடைபெற்றது. இதில், அனைத்து உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் டீ, காபி, உணவு பொருட்கள் போன்றவை பார்சல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
Similar News
News April 8, 2025
உலகம் வியக்கும் தஞ்சாவூர் பொருட்கள்

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 62 பொருட்களில், 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும் அவை: 1. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 2. தஞ்சாவூர் ஓவியம் 3. சுவாமிமலை வெங்கல சிலை 4. நாச்சியார்கோவில் விளக்கு 5. தஞ்சாவூர் வீணை 6. தஞ்சாவூர் கலைத்தட்டு 7. கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் 8. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு 9. கும்பகோணம் வெற்றிலை 10. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகியவை ஆகும். ஷேர் பண்ணுங்க
News April 8, 2025
தஞ்சை அருகே வேலை வாய்ப்பு

திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 8, 2025
தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.