News March 21, 2024

தஞ்சாவூர்: மூத்த குடிமக்களுக்கு 12 D படிவம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிக்கு நேரில் வர இயலாத வாக்காளர்களுக்கான 12D க்கான படிவத்தினை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வங்கி ஊழியர் காலணியில் வசிக்கும் 88 வயது மூத்த குடிமகன் சீனிவாசன் என்பவருக்கு ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று வழங்கினார்.
உடன் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் இருந்தனர்.

Similar News

News April 14, 2025

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!

News April 13, 2025

தஞ்சையில் முருகனுக்கு அறுபடை வீடு இருக்கு! தெரியுமா?

image

தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடு, முதல் படைவீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், அலங்கம். இரண்டாம் படைவீடு: சுப்பிரயமணிய சாமி கோயில், பூக்கார தெரு. மூன்றாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில் சின்ன அரிசிக்கார தெரு. நான்காம் படைவீடு: சுவாமிநாத சுவாமி கோயில், ஆட்டுமந்தை தெரு. ஐந்தாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில், குறிச்சி தெரு கீழவாசல். ஆறாம் படைவீடு: பால தண்டாயுதபாணி சுவாமி கோயில், வடக்கு அலங்கம்.

News April 13, 2025

தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

image

தஞ்சாவூர் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தந்த கோட்டத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டை திருத்தம், பெயர் மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!