News March 21, 2025

தகவல் அளித்தால் ரூ.2,000 வெகுமதி

image

தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகள் பல்வேறு நடவக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறுகையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக கிராமம் வாரியாக குழு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளித்தார் ரூ.2,000 வெகுமதி வழங்கப்படும் என்றார்.

Similar News

News March 29, 2025

கோவையில் தரிசிக்க வேண்டிய அம்மன் கோயில்கள்!

image

கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோயில் – மேட்டுப்பாளையம். பொன்னூத்தம்மன் கோயில் – தடாகம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்காநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். ராமலிங்க செளவுடேஸ்வரி அம்மன் கோவில் – குமாரபாளையம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News March 29, 2025

பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

image

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.

News March 29, 2025

25 ரவுடிகள் மாநகரை விட்டு வெளியேற உத்தரவு: கமிஷனர்

image

கோவை மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை வெளியேற்ற 25 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் 2 தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியேற்ற உத்தரவு. 

error: Content is protected !!