News April 9, 2025
ட்ரோன் பறக்க தடை

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகையை முன்னிட்டு சூலூர் விமானப்படை தளத்தை சுற்றிலும் 10 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு சூலூரில் இருந்து வெலிங்டன் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 19, 2025
கோவை: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️கோவை மாவட்ட வருவாய் அலுவலர் 0422- 2300035. ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 0422 -2301523. ▶️சிறப்பு துணை ஆட்சியர் 0422- 2304204. ▶️மாவட்ட பின்தங்கிய வகுப்பு நல அலுவலர் 0422-2300404. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0422- 2301114. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0422- 2300569. ▶️மாவட்ட தேர்தல் அலுவலர் 0422- 2303786. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0422- 2300293. இதை SHARE பண்ணுங்க.
News April 19, 2025
மருதமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

கோவை, மருதமலை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், கோவிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில், மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றனர்.
News April 19, 2025
கோவை அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு!

கோவை, சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று மாலை தனது மனைவி ஜோதிமணியுடன், பைக்கில் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது, தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது, வேகத்தடையில் பைக் நிலை தடுமாறியதில், ஜோதிமணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.