News April 12, 2025
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.
Similar News
News April 14, 2025
மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
News April 14, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

இன்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE