News April 4, 2025

டிக்கெட் இன்றி பயணம்: ரூ.22.14 கோடி அபராதம் வசூல்!

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 3.30 லட்சம் பயணிகளிடம் இருந்து ரூ.22.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 16% அதிகம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முறையாக டிக்கெட் எடுத்து உரிய வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

Similar News

News April 5, 2025

‘படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவி’

image

“சேலம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 622 திருநங்கைகளில் 569 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு முகாம் நடத்தி விரைவில் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்; படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2025

சேலத்தில் இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

image

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) இந்த <>லிங்க்கில் <<>>உள்ள Google Form மூலமாகவோ வரும் ஏப்ரல் 18-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதை மற்றவர்கள் பயன்பெற SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!