News April 19, 2024
டாஸ்மாக் கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், வரும் மே 1ம் தேதி மே தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், மூடப்பட வேண்டும். அன்றயை தினங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் டாஸ்மாக் மதுபான கடைகளில் மேற்பார்வையார்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று (ஏப்.30) கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 29-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் POSH சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் 0451228800, 9597846790, 8825894085, 9976992480, 997605067, 93616664416 போன்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க