News April 1, 2025
ஜெயங்கொண்டம்: மூதாட்டியை தாக்கிவிட்டு திருட்டு முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (42). இவர் கூலி வேலைக்காக மேலமைக்கேல்பட்டி கிராமத்திற்கு சென்றபோது, அங்குள்ள ஒரு வீட்டில் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் இருந்த 95 வயது மூதாட்டி சத்தமிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். இதனால் அந்த மூதாட்டியை தாக்கியுள்ளார்.அப்போது பொதுமக்களே அவரை பிடித்து கட்டி வைத்து தா.பழூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 8, 2025
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தற்போதே வெயிலில் தாக்கம் பல இடங்களில் சத்தம் அடித்து வரும் நிலையில் அரியலூர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெயிலின் தாக்கம் குறித்து அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அனைவரும் இந்த கோடைகாலத்தில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும் குளிச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
News April 8, 2025
வேண்டியதை தரும் அருள்மிகு தையல்நாயகி அம்மன்

அரியலூர், பொய்யாத நல்லூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தையல்நாயகி திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிஅமாவாசை, ஆடிவெள்ளி இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 8, 2025
அரியலூர்: 12th முடித்தவர்களுக்கு வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்கள்.