News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

Similar News

News April 5, 2025

படப்பையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் இன்று (ஏப்ரல் 5) கைது செய்தனர். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதாம் உசேன், பிரவீன் குமார், இம்ரான்கான் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என சலுகை முறையில் விற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News April 5, 2025

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

image

காஞ்சிபுரத்தில், 2024-25ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிங்களை பெற்று, மே 1ஆம் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

News April 5, 2025

மகாவீர் ஜெயந்தியன்று மதுபானக் கடைகள் மூட உத்தரவு

image

காஞ்சிபுரத்தில், வரும் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இது, தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1989 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!