News April 28, 2025
சேலம் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில்

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், மே 01- ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
Similar News
News April 28, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News April 28, 2025
சேலத்தில் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். எனினும் பலர் தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பருகி சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலத்தில் இன்று (ஏப்.28) 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்திற்கு பிறகு 100 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.
News April 28, 2025
இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது!

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் வால்மீகி தெரு, முஹமத்புரா தெரு, கருவாட்டுபாலம், கிச்சிபாளையம் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிகுத்தி மெயின் ரோடு ஒரு பகுதி, களரம்பட்டி மெயின் ரோடு ஒரு பகுதி, கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு,SMC காலனி, லட்சுமி நகர், சத்தியமூர்த்தி நகர், காந்திமகான் தெரு பகுதிகளில் நாளை (ஏப்.29) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT