News March 19, 2024

சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் 

image

மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

சேலம்: விருதிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்திற்கான அறிவிப்பு முன்மாதிரியான சேவை விருது பெற விண்ணப்பிப்பதற்கு இன்று(ஆக.5) மாலையுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விருதுகள் பெற விரும்பினால் உடனடியாக தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

News August 5, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிக்ழ்வுகள்

image

♦️ காலை 9 மணி அம்மாபேட்டை, ராஜசேகர் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ♦️நிலவாரப்பட்டி சமுதாயக்கூடத்தில் முகாம் ♦️காலை 10:15 பெரியார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ♦️காலை 10.30 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் கட்சி அலுவலகம் ♦️காலை 6 மணி முதல் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்.

News August 5, 2025

சேலம்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்!

image

சேலம் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO மூலம் கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)

error: Content is protected !!