News April 8, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக, ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) ஏப்ரல் 08, 15 ஆகிய நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
Similar News
News April 8, 2025
பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியின் கால அளவு 30 நாட்கள்; தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி ஏப்.09 ஆகும். மேலும் – தொடர்புக்கு 75503-69295, 95666-29044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News April 8, 2025
சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து ஓசூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கோவை, சென்னை, பெங்களூரு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News April 8, 2025
ஏப்.15- ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.