News April 1, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

நாளை (ஏப்ரல் 01) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சுமார் 8 மணி 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 5, 2025
சேலத்தில் நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மேற்கு வட்டம் மஜ்ரா கொல்லப்பட்டி, இரும்பாலை மெயின் ரோடு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News April 5, 2025
‘படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவி’

“சேலம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 622 திருநங்கைகளில் 569 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு முகாம் நடத்தி விரைவில் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்; படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
News April 5, 2025
சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.