News March 31, 2024
சேலம்: ரயில் ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு ரத்து!
கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News November 20, 2024
ரேஷன் அரிசியை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்துபவர்களை, தமிழக அரசு இரும்புகரம் கொண்டு அடக்கி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் பொதுமக்களும், தாங்கள் நியாய விலை கடையில் வாங்கும் அரிசியை விற்பனை செய்யாமல், தங்கள் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
News November 19, 2024
சேலம்: இன்றைய தலைப்பு செய்திகள்
➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.
News November 19, 2024
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.