News March 25, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 01 முதல் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் துவங்கவுள்ளது. 12 வேலை நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக மொத்தம் ரூ.1770 ஆகும். கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத்தொகை www.sdat.tn.gov.in வாயிலாகவும், G Pay, Phone Pay மூலமாக மட்டும் செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2025
கிராம மக்கள் ஏற்பாடு செய்த விருந்தில் ஆட்சியர் பங்கேற்பு

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் கிராம ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024-25 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, இன்று (மார்ச் 29) நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் வீராணம் கிராம பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, பங்கேற்றார்.
News March 29, 2025
மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி செய்த பெண் கைது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அரவிந்த்சாமியிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யா ராஜ் என்ற இளம்பெண், பண மோசடி செய்துள்ளார். மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 29, 2025
திருமண வரம் அருளும் தாரமங்கலம் கோவில்!

சேலம்: தாராமங்கலத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு புகழ்பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் வியப்புக்குரியவை. இத்தலத்திலேயே சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும். இந்த லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம், தொழில் விருத்தி கை கூடும் என்பது நம்பிக்கை.