News March 3, 2025
சேலம் மார்ச் 3 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மார்ச் 3 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ▶️காலை 10:30 மணி பாரத வெண்புறா மக்கள் சேவை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம். ▶️11 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️ காலை 11:30 மணி ஜெய் ஜவான் ஜெய் கிஷான் மஸ்தார் பெடரேஷன் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 5 மணி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டைமைதானம்
Similar News
News March 4, 2025
பைக் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு

சேலம், பெரிய வனவாசியை சேர்ந்த மணிவேல் என்பவர் அமரகுந்தியில் உள்ள தனது தங்கையை காண இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லிக்குந்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில் மணிவேல் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 4, 2025
நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டத்தில் சேலம் எம்.பி.

டெல்லியில் நேற்று (மார்ச். 3) நடைபெற்ற நிலக்கரி, கனிமவளம் மற்றும் எஃகு துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டத்தில் திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிலக்கரி சுரங்கங்கள், உருக்காலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.
News March 3, 2025
சேலத்தில் +2 தேர்வில் 99.22% தேர்வு எழுதினர்

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு முதல் தேர்வான தமிழ் தேர்வில் 151 மையங்களில் பயிலும் மாணவர்கள் 37,161 மற்றும் தனித் தேர்வுகள் 213 என மொத்தம் 37,374 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில் இன்றைய தமிழ் தேர்வில் 36,903 பள்ளி மாணாக்கர்களும், 180 தனித்தேர்வர்கள் என 37,083 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது சதவீதத்தில் 99.22 ஆகும்.