News April 21, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

Similar News

News April 21, 2025

சேலம் மாவட்டத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், உணவு டெலிவரி ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர். இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் இன்று சேலத்தில் அதிகபட்ச அளவாக 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

News April 21, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) நாளை (ஏப்.22) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 08.25 மணி நேரம் அதாவது மாலை 04.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

சேலம்: TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஏப்.22) காலை 09.30 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0427- 2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!