News April 4, 2025

சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

image

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

Similar News

News August 9, 2025

இணையதளத்தில் அழைப்பு ஆட்சியர் தகவல்!

image

போதை இல்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் விதமாக வருகின்ற 11-ம் தேதி திங்கட்கிழமை மாநிலம் முழுவதும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. சிஎம் காணொளி வாயிலாக உறுதியேற்கிறார். சேலத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இணையதளம் https://www.drugfreetamilnadu.tn.gov.in/ மேலும் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து உறுதிமொழி ஏற்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பெறலாம், என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 8, 2025

சேலம்: புகைப்பிடித்தால் கடும் நடவடிக்கை

image

சேலம் ரயில்வே பகுதிகளில் இயங்கும், ரயில்களில் பயணிக்கும் சிலர் பீடி, சிகரெட், புகைப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் சேலம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பீடி, சிகரெட், குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஎப் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் இது தொடர்பாக 139 அழைத்து புகார் செய்யலாம்.

error: Content is protected !!