News March 23, 2025
சேலம் மக்களே இந்த டைம்ல வெளியே போகாதீங்க!

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை எட்டி வெப்பக் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வெயிலில் சோர்வு, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
ஐபிஎல் சூதாட்டம்: தோல்வியால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி தானங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி கார்த்திக் என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் என்று ரூ.50,000 பந்தயம் கட்டியுள்ளார். அவர் கட்டிய அணி தோல்வியடைந்ததால் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 19, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்ரல்19 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
News April 19, 2025
பழங்குடியினர், மலைவாழ் மீனவ மக்கள் விண்ணப்பிக்கலாம்!

“மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மீனவ மக்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டுர் அணை அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 96773- 50979, 89400-00482 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்”.