News March 16, 2025
சேலம்: பார்ட் டைம் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி

பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட் சத்து 29 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் வாகீத் (23), முகமது ஷெரீப் (26) ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 17, 2025
“ஹெட்லைட்டை மாற்றலாம் தலையை மாற்ற முடியாது”

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மார்ச். 16) தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், ஹெட்லைட்டை மாற்றலாம், தலையை மாற்ற முடியாது என விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News March 17, 2025
உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News March 17, 2025
சேலத்தில் முருக பக்தர்கள் செல்ல வேண்டிய கோயில்கள் இதுதான்

ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் சேலத்தில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள். ▶️முத்துமலை முருகன் கோயில் (ஏத்தாப்பூர்) ▶️காவடி பழனி ஆண்டவர் திருக்கோயில் (சூரமங்கலம்) ▶️காளிப்பட்டி முருகன் கோயில் (ஆட்டையாம்பட்டி) ▶️கந்தாஸ்ரமம் திருக்கோயில் மற்றும் குமரகிரி தண்டாயுதபாணி கோயில் (சேலம் மாநகர்) ஆகும். இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.