News March 26, 2025
சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா? என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News March 31, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (31.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News March 31, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.31 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
News March 31, 2025
சேலத்தில் CSK முன்னாள் வீரர்!

சேலம் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சிக் கோப்பை வீரருமான கே.பி.அருண் கார்த்திக், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.