News April 2, 2024
சேலம்: CSK கோடை கால கிரிக்கெட் பயிற்சி

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) நடத்தும் சூப்பர் கிங்ஸ் அகாடமியில், ஏப்.6ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 6 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மாணவ சேர்க்கைக்கு 73054 22282 தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு www.superkingsacademy.com என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்ரல்19 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
News April 19, 2025
பழங்குடியினர், மலைவாழ் மீனவ மக்கள் விண்ணப்பிக்கலாம்!

“மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மீனவ மக்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டுர் அணை அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 96773- 50979, 89400-00482 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்”.
News April 19, 2025
சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்.21 அன்று காலை 10.00 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0427- 2401750 அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரில் அணுகியும் பயன்பெறலாம். இதை அரசு வேலைக்கு தயாராகும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.