News March 21, 2025
சேலத்தை கலக்கும் ‘குளுகுளு’ ஆட்டோ

சேலம் குரங்குசாவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி(74) . இவர் தனது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் சிறிய தண்ணீர் டேங்க், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் ஆகியவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். சேலத்தை கலக்கும் இந்த ஆட்டோ குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 26, 2025
சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
News March 26, 2025
இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்-7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய கால பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்- 636007 என்ற முகவரியிலும், 99769 54196, 99651 03597 கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்-உடனே SHARE பண்ணுங்க.
News March 26, 2025
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைதீர் கூட்டம்

சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் உள்ள விநாயக வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 27) காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், இரண்டாம் பாகம் கூட்டம் மதியம் 2 மணி முதல் மாலை 5:45 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.