News February 27, 2025
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலத்தில் (பிப்.27) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 7.30 மணி பழனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது. 2) காலை 10:30 மணிக்கு அரசு மோகன் குமார் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை தடுப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. 3)காலை 11 மணி அங்காளம்மன் கோவிலில் இருந்து மயான கொள்ளை புறப்பாடு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
Similar News
News February 27, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சேலத்தில் பிப்., மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள்கூட்டம் நாளையதினம் வெள்ளிக் கிழமை காலை 10.30 மணிக்கு கலெக்டர் ஆபீஸில் நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும் தபால் மூலமாவும் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
News February 27, 2025
250 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்!

வார இறுதி நாட்கள், வளர்பிறை முகூர்த்தத்தினங்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (பிப்.28) முதல் மார்ச் 03- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஓசூரு, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News February 27, 2025
யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <