News March 3, 2025
சேலத்தில் 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

சாலை பாதுகாப்பு குறித்து போலீசார், அரசு அலுவலகர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு செல்வது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்காத 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 137 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2025
நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டத்தில் சேலம் எம்.பி.

டெல்லியில் நேற்று (மார்ச். 3) நடைபெற்ற நிலக்கரி, கனிமவளம் மற்றும் எஃகு துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டத்தில் திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிலக்கரி சுரங்கங்கள், உருக்காலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.
News March 3, 2025
சேலத்தில் +2 தேர்வில் 99.22% தேர்வு எழுதினர்

சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு முதல் தேர்வான தமிழ் தேர்வில் 151 மையங்களில் பயிலும் மாணவர்கள் 37,161 மற்றும் தனித் தேர்வுகள் 213 என மொத்தம் 37,374 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில் இன்றைய தமிழ் தேர்வில் 36,903 பள்ளி மாணாக்கர்களும், 180 தனித்தேர்வர்கள் என 37,083 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது சதவீதத்தில் 99.22 ஆகும்.
News March 3, 2025
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671), மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12672) ஆகிய ரயில்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.