News April 25, 2025
செல்போன் பேசினால் லைசென்ஸ் காலி!

கடந்த மூன்று மாதத்தில் சேலம், தருமபுரியில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 233 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 146 ஓட்டுநர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.
Similar News
News April 25, 2025
சேலம் மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 25, 2025
சேலம் : திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பத்ரகாளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 25, 2025
மாவட்டத்தில் கூடுதலாக மூன்று தீயணைப்பு நிலையங்கள்

சேலம் மாவட்டத்தில் 15 இடங்களில் தற்போது தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அயோத்தியாபட்டினம், பெத்தநாயக்கன்பாளையம், மற்றும் தலைவாசல் ஆகிய மூன்று இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதை அரசு பரிசீலித்து அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.