News March 16, 2025

சென்னைவாசிகள் கவனத்திற்கு..! ஆட்டோ கால் டாக்ஸி ஓடாது!

image

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

Similar News

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <>கிளிக் <<>>செய்யவும்.

News March 17, 2025

சிஎஸ்கே போட்டிக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

image

இந்தியாவில் 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில், மார்ச் 23ல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் எனவும், போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

தீ பிடித்து எரிந்த மின்சார பைக்; மூவர் படுகாயம்

image

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த நடராஜன் தனது மின்சார பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று படுத்துள்ளார்.கீழ்தளத்தில் அவரின் மகன் கெளதம்,மருமகள் மஞ்சு, 9 மாத குழந்தை மூவரும் உறங்கி உள்ளனர். அதிகாலை 5 மணிக்கு சார்ஜில் இருந்த மின்சார பைக் திடீரென தீ பிடித்து எரிந்து கீழ்தளம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!