News May 5, 2024
சென்னையில் வெப்ப அலை காரணமாக ஒருவர் பலி

சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்த வடமாநிலத்தை சேர்ந்த சச்சின் (25) என்ற கூலி தொழிலாளி 2 நாட்களுக்கு முன்பு வெப்ப அலை காரணமாக மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார். அவருடன் சேர்ந்து பணிபுரிந்த வேலு (35) என்பவர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News April 20, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (20.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 20, 2025
ஏ.சி., ரயில் பொது மக்களிடம் கருத்து கேட்பு

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிர்சாதன மின்சார சேவை நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு மொத்தமாக 6 சேவைகளாக இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், தற்போது எந்தெந்த நேரங்களில் இந்த ரயிலை இயக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது (6374713251) ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
விரைவில் மின்சார பேருந்து சேவை: சிவசங்கர்

சென்னையில், வரும் ஜூன் மாதம் முதல் மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையை தொடர்ந்து மதுரையிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார். புதிய மின்சார பேருந்துகளை காண பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.